Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» அந்தர்கங்கே

அந்தர்கங்கே - சாகசத்தின் எல்லை 

2

சாகசப் பயணம் செல்வதை உயிர்மூச்சென கொண்டிருக்கும் வீரர்களுக்கு அந்தர்கங்கே கண்டிப்பாக ஒரு மறக்கமுடியாத பயணமாக அமையும். அந்தர்கங்கே என்ற பெயர் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திற்கு கிழக்கே அமைந்திருக்கும் குன்றுகளில் எந்த காலத்திலும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஓடை நீரை குறிக்கிறது.

அந்தர்கங்கே அமைந்திருக்கும் குன்றுகளின் அடிவாரத்தில் அடர்ந்த காடு ஒன்று இருக்கிறது. இந்தக் காட்டின் தாவரங்கள் குன்றின் உச்சியை நெருங்க நெருங்க குறைந்துகொண்டே செல்லும். இறுதியாக குன்றின் உச்சியில் கிரீடம் வைத்தது போல் முற்புதர்கள் அடர்த்தியாக மண்டிக் கிடக்கும் காட்சியை பயணிகள் காணலாம்.

அந்தர்கங்கேயின் எழில்மிகு தோற்றத்திற்கு குன்றுகளில் உள்ள குகைகளும், பாறைகளின் வடிவமுமே காரணம். அந்தர்கங்கே சாகசப் பயணம் செல்ல துடிப்புள்ளவர்களுக்கும், மலை ஏறும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் நிச்சயமாக சிறந்த அனுபவமாக இருக்கும்.

குன்றின் உச்சிக்கு செல்ல குறைந்தது 2 அல்லது 1 மணி நேரமாவது ஆகும். எனினும் இறங்கி வர குறைந்த காலமே பிடிக்கும்.  கயிறு மூலமாக ஏறி குன்றின் உச்சிக்கு செல்வது இங்கு வரும் சாகசப் பிரியர்களுக்கு பிடித்த செயலாகும். 

அந்தர்கங்கேவுக்கு அதன் வற்றாத நீர் வரத்தை காணவும், அங்கு அமைந்திருக்கும் கோயிலை தேடியும் புனித யாத்ரிகர்கள் அடிக்கடி வந்து செல்வதால் அப்பகுதியின் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலமாகவும் அந்தர்கங்கே அறியப்படுகிறது.

அந்தர்கங்கே சிறப்பு

அந்தர்கங்கே வானிலை

சிறந்த காலநிலை அந்தர்கங்கே

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது அந்தர்கங்கே

  • சாலை வழியாக
    பெங்களூர் மற்றும் கோலாரிலிருந்து, அந்தர்கங்கேவுக்கு பேருந்து ஏதும் இல்லாததால் பயணிகள் வாடகை கார்களிலேயோ, இரண்டு சக்கர வாகனத்திலேயோ தான் அந்தர்கங்கேயை அடைய முடியும். இரண்டு சக்கர வாகனத்தில் அந்தர்கங்கே செல்வது சாகசப் பயணத்திற்கு சிறந்த முன்னோட்டமாக இருக்கும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    அந்தர்கங்கேவுக்கு வெகு அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் கோலார் ரயில் நிலையம் இருக்கிறது. எனவே பயணிகள் கோலார் வந்த பின்பு வாடகை கார்களிலேயோ, மோட்டார் பைக்குகளிலேயோ சுலபமாக அந்தர்கங்கேயை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    அந்தர்கங்கேயிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் பெங்களூர் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து இந்தியா மற்றும், உலகத்தின் அனைத்து பெருநகரங்களுக்கும் விமான போக்குவரத்து இருப்பதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் எந்த சிரமமுமின்றி அந்தர்கங்கேயை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
27 Jul,Mon
Return On
28 Jul,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
27 Jul,Mon
Check Out
28 Jul,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
27 Jul,Mon
Return On
28 Jul,Tue