நவ்கொண்டா அரண்மனை தற்சமயம் சிதிலமடைந்து காணப்படுகிறது. இருப்பினும் நிஜாம் அலி கான் இந்த அரண்மனையில் வசித்தபோது இதில் 5 ஜனனாக்கள்(அந்தப்புரங்கள்), ஒரு தீவான்–இ–ஆம்(மக்கள் சந்திப்பு அறை), ஒரு தீவான–இ–கா(முக்கியஸ்தர் சந்திப்பு அறை), ஒரு மஸ்ஜித்(தொழுகை முற்றம்) மற்றும் ஒரு கச்சேரி(சபை) ஆகியவை இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே ஒரு பூந்தோட்டமும், ஒரு நீர் தடாகமும் அமைந்திருந்தது என்றால் வரலாற்று காலத்தில் இந்த அரண்மனை எப்படி விளங்கியிருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளலாம்.இந்த அரண்மனையின் மையப்பகுதி அதற்கான குளியலறை பகுதியுடன் இன்றும் சேதமடையாமல் உள்ளது. இருப்பினும் அவற்றின் மர வேலைப்பாடுகளும் அலங்கார பூச்சுகளும் அழிந்து விட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.



Click it and Unblock the Notifications