Search
  • Follow NativePlanet
Share

பாகா பீச் - கேளிக்கையின் குடியிருப்பு!

19

நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற கடற்கரை கோவாவில் உண்டெனில் அது பாகா பீச்சை தவிர வேறெதுவாக இருக்க முடியும். இங்கு கடற்கரைக் குடில்கள் முதல் உணவகங்கள் வரை, சிறந்த ஹோட்டல்கள் முதல் அசல் ஜேர்மன் அடுமனை வரை ஒவ்வொன்றும் உங்களுக்கு புதியதோர் அனுபவத்தை கொடுக்கும்.

பாகா பீச் அதன் பரப்பளவிலும் சரி, அது தரும் அனுபவங்களிலும் சரி எவரையும் பிரமிக்க வைத்து விடும். இங்கு வரும் பயணிகள் பாராசெய்லிங், வாட்டர் பைக் சவாரி, பனானா ரைட், படகு சவாரி போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.

பாகா பீச்சின் தொடக்கத்திலேயே அமைந்திருக்கும் புகழ்பெற்ற கஃபே பிரிட்டோஸில் கிடைக்கும் காக்டெயிலுக்காகவும், கடல் உணவுக்காகவும் உயிரை கூடக் கொடுக்கலாம். அதோடு கோவான் மீன் சாப்பாடும் இங்கு வரும் பயணிகளிடையே பிரபலம்.

பாகா பீச்சுக்கு மாலை வேலைகளில் வருபவர்கள் கஃபே பிரிட்டோஸை முத்தமிடத் துடிக்கும் கடலலைகளை ரசித்துக் கொண்டே இரவு உணவை ருசிக்கலாம்.

மேலும், கஃபே பிரிட்டோஸுக்கு வெளியே உள்ள அடுமனையை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது. இதன் முகப்புத் தோற்றம் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பாங்கு அலாதியானது. இங்கு வரும் பயணிகளுக்கு ஐரோப்பிய வீதிகளில் இருப்பது போன்ற ஒரு மயக்கத்தை இந்த அடுமனையின் வடிவமைப்பு ஏற்படுத்திவிடும்.

பாகா பீச்சில் கரோக்கி இரவு என்பது மிகவும் சாதாரணம் என்பதால், குடில்கள் அனைத்துமே கரோக்கி வசதியுடனே உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் அனைத்து குடில்களிலும் வெவ்வேறு சுவை மற்றும் மனங்களில் ஹக்கா உணவு கிடைக்கும்.

பாகா பீச்சை பேருந்து மற்றும் கார்களின் மூலம் சுலபமாக அடைந்து விடலாம். மேலும், மாம்போஸ் இரவு விடுதி, கேண்டலிம் கடற்கரை மற்றும் பனாஜி ஆகியவையும் பாகா பீச்சுக்கு வெகு அருகில் உள்ளன. எனவே இந்த இடங்களிலிருந்து உங்கள் விருப்பதிற்கேற்ப பேருந்துகள் அல்லது வாடகை கார்களின் மூலம் பாகா பீச்சை அடையலாம்.

பாகா பீச் சிறப்பு

பாகா பீச் வானிலை

சிறந்த காலநிலை பாகா பீச்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பாகா பீச்

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu