Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாகா பீச் » ஈர்க்கும் இடங்கள் » கஃபே டெல் மார் பீச் பார் அண்ட் கிளப்

கஃபே டெல் மார் பீச் பார் அண்ட் கிளப், பாகா பீச்

19

உலகிலேயே இபிஸாவுக்கு பிறகு மூங்கில்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள உல்லாச விடுதி கோவாவில்தான் இருக்கிறது. அந்த தனிப்பெரும் பெருமைக்கு சொந்தமான கஃபே டெல் மார் பீச் பார் அண்ட் கிளப், மார்கோ மற்றும் பனாஜியை உள்ளடக்கிய தெற்கு கோவாவின் புகழ்பெற்ற கேளிக்கை விடுதியாகும். இந்த உல்லாச விடுதி பலோலம் கடற்கரையில் அமைந்திருக்கிறது.

கஃபே டெல் மார் விடுதிக்கு கூட்டம் கூட்டமாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும் உட்புற அலங்காரங்களும், விடுதியின் இயற்கை சூழலும் புதிதோர் இரவினை கண்முன்னே நிறுத்தும்.

மேலும், தெற்கு கோவாவில் உள்ள இரவு விடுதிகளில் நீங்கள் வேறெங்கும் அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிவரை கேளிக்கைகளில் ஈடுபட முடியாது. ஆனால் கஃபே டெல் மார் விடுதி அதற்கான உரிமத்தை பெற்றுள்ளது.

எனவே நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இந்த விடுதியில் விரும்பும் மதுவினை அருந்தியவாரே கேளிக்கைகளில் திளைக்கலாம். அதுமட்டுமல்லாமல் விடுதியில் ஒலிபரப்பப்படும் பாடல்களுக்கு ஏற்ப, காக்டெயில்கள் தந்த கிறுகிறுப்போடு நடனமாடி மகிழலாம்.

கஃபே டெல் மார் விடுதியில் உள்ள நடன மேடை நிறைய பேர் ஆடும் அளவுக்கு இட வசதி உள்ளது என்றாலும், கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். அதனால் வயது வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் அவரவர்கள் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் நடனம் ஆடலாம்.

அதோடு இந்த விடுதியை கோவா விமான நிலையம், வாஸ்கோ அல்லது மார்கோவிலிருந்து வாடகை கார்கள் மூலம் சுலபமாக அடைந்து விடலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue