Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » ஈர்க்கும் இடங்கள் » கப்பன் பார்க்

கப்பன் பார்க், பெங்களூர்

212

1870 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த எழில் மிகுந்த பூங்கா பெங்களுர் மாநகரத்தின் முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும். நகர நிர்வாக வளாகத்தின் அருகிலேயே இது அமைந்துள்ளது. எம்.ஜி ரோடு வழியாகவோ அல்லது கஸ்தூரிபா ரோடு வழியாகவோ இதற்குள் செல்லலாம்.

 

முதலில் 100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த பூங்கா பின்னர் விரிவு படுத்தப்பட்டு தற்சமயம் 300 பரப்பளவில் காணப்படுகிறது. பல அழகான அரிய வகை தாவரங்களையும் பூச்செடிகளையும் இந்த பூங்கா கொண்டுள்ளது. முதலில் மீட்’ஸ் பார்க் என்றழைக்கப்பட்ட இந்த பூங்கா அதன் பின்னர் மார்க் கப்பன் என்ற ஆங்கிலேய கமிஷனர் பெயரில் அழைக்கப்படுகிறது.

1927 ம் ஆண்டு அப்போதைய மைசூர் மஹாராஜா கிருஷ்ணராஜா உடையார் இந்த பூங்காவின் பெயரை சாமராஜேந்திர உடையார் பூங்கா என்று மாற்றி அமைத்தார். (சாமராஜேந்திர உடையார் காலத்தில் தான் இந்த பூங்கா உருவானது என்பது குறிப்பிடத் தக்கது).

தற்சமயம் கர்நாடக மாநில அரசின் தோட்டக்கலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கப்பன் பூங்கா பிரம்மாண்டமான பரப்பில் பசுமையான மூங்கில் காடுகள், பலவிதமான மரங்கள், செடிகளுடன் பெங்களூரின் முக்கிய சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed