Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » ஈர்க்கும் இடங்கள் » இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ், பெங்களூர்

212

உயர்கல்விக்காக 1909 ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்ட முன்னோடியான கல்வி ஸ்தாபனம் இந்த ஐஐஎஸ்சி IISC என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ்’ ஆகும். பெங்களூரின் வடக்கு பகுதியில் முக்கிய ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது.

 

இந்த கல்வி ஸ்தாபனத்தின் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை உள்ளது. 1892 ம் ஆண்டில் சுவாமி விவேகானந்தாவும் ஜாம்ஷெட்ஜி டாட்டாவும் சாதாரணமாக உரையாடிக்கொண்டிருந்த போது அவர்கள் பேச்சில் தற்செயலாக பிறந்ததுதான் இந்த கல்வி ஸ்தாபனத்துக்கான திட்டம் என்று சொல்லப்படுகிறது.

1909ம் ஆண்டும் மைசூர் மஹாராஜாவால் இந்த கல்வி ஸ்தாபனத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. IISC கல்வி ஸ்தாபனம் 40 கல்வித்துறைகளைக்கொண்டு உன்னதமான வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூட வசதிகளோடு காணப்படுகிறது.

இங்கு ஆறு உணவகங்கள், உடற்பயிற்சிக்கூடம், கால் பந்து மற்றும் கிரிக்கெட் மைதானம், விருந்தினர்களுக்கான ஃபேமிலி ரெஸ்டாரெண்ட் மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான விடுதிகள் போன்றவை அமைந்துள்ளன. இது மட்டுமன்றி இங்கு பணிபுரிவோருக்கான வீடுகள், நூலகம், ஷாப்பிங் செண்டர், மசாஜ் பார்லர் போன்றவையும் இந்த வளாகத்தில் காணப்படுகின்றன.

இந்த வளகாத்தினை ஒட்டி பாதுகாக்கப்பட்ட பசுமைப்பகுதியும் அமைந்துள்ளது. இதில் அரிய தாவரங்களும் மரங்களும் காணப்படுகின்றன. இந்த ஸ்தாபனத்தின் கட்டிடக்கலை அமைப்பு பாரம்பரிய பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. பி.ஹெச். டி PhD அல்லது எம்.எஸ்  MS என்ற இரண்டு பிரிவுகளில் இங்கு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் எம்.எஸ் என்பது  ME, MBA போன்ற பட்டங்களுக்கு இணையானது என்பது குறிப்பிட த்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu