Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » ஈர்க்கும் இடங்கள் » இன்னோவேடிவ் பிலிம் சிட்டி

இன்னோவேடிவ் பிலிம் சிட்டி, பெங்களூர்

212

பெங்களூர் – மைசூர் மாநில நெடுஞ்சாலை SH-17 ல் வொண்டர் லா அமைந்திருக்கும் இடத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இந்த இன்னோவேடிவ் சிட்டி அமைந்துள்ளது. பெயருக்கேற்றபடி இது இந்தியாவில் உள்ள தீம் பார்க்’குகளில் பல  நூதனமான இயல்புகளுடன் காணப்படுகிறது.

 

குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் ஏற்ற கேளிக்கை அம்சங்களை இது கொண்டுள்ளது. ஒரு முழு நாளையும் இங்கு குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கழிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.

பெங்களூரிலிருந்து சாலைவழியாக செல்லும்படி அமைந்துள்ள இந்த பொழுதுபோக்கு ஸ்தலம் காலை 10மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை திறந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு மட்டும் ஒரு நபருக்கு 299 ரூபாயும் எல்லா விளையாட்டுகளுக்காகவும் எனில் நபர் ஒருவருக்கு 499 ரூபாயும் இங்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இங்கு இன்னோவேடிவ் ஸ்டுடியோ, ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் மியூசியம், 4D தியேட்டர், குழந்தைகள் குகை, லூயி டஸ்ஸாட் மெழுகு மியூசியம் மற்றும் தீம் ரெஸ்டாரண்டுகள் அமைந்துள்ளன. வான்னடோ சிட்டி எனும் குழந்தைகளுக்கான தீம் விளையாட்டு இங்கு மிகவும் புதுமையான ஒன்றாக உள்ளது. இங்கு குழந்தைகள் நிஜமான சூழலில் அவர்கள் விரும்பும் கதாபாத்திரமாக மாறி விளையாடுவதற்கான வசதிகள் உள்ளன. டைனோசார் வேர்ல்டு பகுதியில் திகிலூட்டும் வகையில் அமைந்த ஜூராசிக் ஜீவராசிகளின் தத்ரூப மாடல்கள் உள்ளன. திகில் மாளிகை (ஹான்டட் மேன்ஷன்) எனும் விளையாட்டுப்பகுதியும் சுவாரசியமாக உள்ளது.

இது தவிர மினியேச்சர் சிட்டி எனும் பிரிவில் உலக அதியங்கள் மற்றும் முக்கியமான இடங்களின் த த்ரூப மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தீம் ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவதும் ஒரு தனி அனுபவமாக விளங்கும்படி அமைத்துள்ளனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
04 Apr,Sat
Return On
05 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
04 Apr,Sat
Check Out
05 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
04 Apr,Sat
Return On
05 Apr,Sun