Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » ஈர்க்கும் இடங்கள் » மந்திரி ஸ்கொயர் மால்

மந்திரி ஸ்கொயர் மால், பெங்களூர்

212

பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் M.N காம்ப்ளக்ஸுக்கு அருகில் புகழ் பெற்ற சம்பிகே ரோடில் இந்த மந்திரி ஸ்கொயர் எனும் ஷாப்பிங் மால் (அடுக்குமாடி ஷாப்பிங் சென்டர்) அமைந்துள்ளது. 15 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த மால் இந்தியாவிலேயே பெரியது என்று சொல்லலாம்.

 

சர்வதேச நகரம் என்ற பெருமையை பெங்களூருக்கு தரும்படியாக இந்த பிரம்மாண்ட ஷாப்பிங் மாலில் எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும், ஷாப்பிங் அம்சங்களும் உணவக வசதிகளும் நிரம்பி காணப்படுகின்றன.

பெங்களூர் நகரத்திலேயே ஐந்து பிரபல டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் ஒரே மாலில் இருக்கிறது என்று சொல்லும்படியாக இது ஷாப்பர்ஸ் ஸ்டாப், லைஃப்ஸ்டைல், ரிலையன்ஸ், மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர், பாண்டலூன்ஸ்  போன்ற நிறுவனங்களின் ஷோரூம்களை கொண்டுள்ளது.

மந்த்ரி ஸ்கொயர் மால் அதன் தனித்தன்மையான  கட்டிடக்கலை வடிவமைப்பை பென்டல் அசோசியேட்ஸ் எனும் தென்னாப்பிரிக்க கட்டுமான நிறுவனத்தின் மூலம் உருவாக்கியுள்ளது. இதனுள் 250 உள்நாட்டு மற்று வெளிநாட்டு பிராண்டுகளின் கடைகள் உள்ளன.

இங்குள்ள ஃபுட் கோர்ட் (உணவகம்) 39 வகையான உணவு வகைகள் மற்றும் பானங்களை கொண்டுள்ளது. 4 பிரத்யேக ரெஸ்டாரண்டுகளும் இங்கு உள்ளன.

இது தவிர சினிமா காட்சிகளுக்கென்று கோல்டு கிளாஸ் ஸ்கிரீன் மற்றும் 71 இருக்கைகளைக் கொண்ட ஐனாக்ஸ் திரையரங்கம் 6 திரைகளுடன் இங்கு அமைந்துள்ளது. 2000 கார்களை நிறுத்தும் அளவுக்கு இடவசதி கொண்ட இந்த மாலில் வாலெட் பார்க்கிங் வசதி உள்ளது.

குதூகலம், பொழுதுபோக்கு, ஷாப்பிங், உணவு, சினிமா என்று பல அம்சங்களை மந்த்ரி ஸ்கொயர் மால் ஒரே இடத்தில் வழங்குகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue