பரான் நகரத்திலிருந்து 3கி.மீ தூரத்தில் இந்த மணிஹர மஹாதேவ் மந்திர் எனும் புராதன கோயில் அமைந்துள்ளது. 600 வருடங்கள் பழமையான இக்கோயிலில் ஹிந்துக் கடவுள்களான மஹாதேவ் மற்றும் ஹனுமான சிலைகள் காணப்படுகின்றன.
இக்கோயிலைச் சூழ்ந்து அமைந்திருக்கும் அழகிய மரங்கள் மற்றும் குளங்கள் போன்றவை இப்பிரதேசத்தின் எழிலைக்கூட்டுகின்றன. மேலும், இக்கோயில் ஸ்தலத்தில் சிவராத்திரி திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சர்வஜனிக் சன்ஸ்தா தர்மதா என்பவரை இக்கோயிலுக்கான அறங்காவலராக நியமித்துள்ளது.



Click it and Unblock the Notifications