நீலேஷ்வரம், பேக்கல்

நீலேஷ்வரம் மகாராஜாக்களின் அரசாட்சி செயல்பட்டு வந்த இடமான நீலேஷ்வரம், பேக்கல் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. 'நீலகண்ட' மற்றும் 'ஈஸ்வர்' ஆகிய இரு வார்த்தைகள் சேர்ந்து நீலேஷ்வரம் என்று அறியப்படுகிறது. இந்தப் பகுதி கேரளாவின் முக்கிய கலாச்சார மையமாக திகழ்ந்து வருகிறது.

நீலேஷ்வரம் நகரில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற அரண்மனை தொல்பொருள் துறையினரின் நாட்டுப்புறவியல் மையமாக கருதப்படுகிறது. இதுதவிர நீலேஷ்வரம் நகரம் கவுஸ் எனப்படும் பல்வேறு ஆலயங்களுக்க்காகவும் பிரபலம்.

இங்கு உள்ள யோகா மற்றும் கலாச்சார மையங்களில் மூலிகை குளியல், சேற்றுக் குளியல் போன்ற இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதில் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

நீலேஷ்வரம் நகரின் கிழக்கு எல்லையாக மேற்கு தொடர்ச்சி மலைகளும், மேற்கே லக்ஷ்வதீப்பும், வடக்கே காசர்கோடும், தெற்கு எல்லைகளாக வயநாடு மற்றும் கோழிக்கோடு நகரங்களும் அமைந்திருக்கின்றன.

மேலும் நீலேஷ்வரம் நகரின் இயற்கை சூழலும், காயல் நீர்பரப்பின் வசீகரிக்கும் தோற்றமும் உங்களுக்கு மறக்க முடியாத சுற்றுப் பயண அனுபவமாக அமையும்.

Please Wait while comments are loading...