மா புதி தாகுராணி கோவியில் வருடத்திற்கு இரண்டு முறை தாகுராணி யாத்திரை கொண்டாடப்படுகிறது. நெசவாளர் தலைவர் மற்றும் மனைவியும் இந்த யாத்திரையில் முன்னே செல்கின்றனர். பாரம்பரிய உடைகளுடன் அதில் மக்கள் பங்கேற்பதைப் பார்ப்பது புதுமையான அனுபவமாகும்.
அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர் ஒன்றில் அம்மனை அமர்த்தி அவரது கணவர் வீட்டிலிருந்து பெற்றோர் வீட்டிற்கு இட்டுச் செல்கிறார்கள். பக்தர்கள் இச்சமயத்தில் மலர்களை தூவுகிறார்கள்.
அப்போது பக்தர்களிடையே நிலவும் பரவசமும், பக்தியும் வார்த்தைகளில் அடங்காதது. இக்கோவிலின் அர்ச்சகர்கள் முடி திருத்தும் சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு மாதம் நடக்கும் இந்த திருவிழா காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாய் இருக்கிறது.



Click it and Unblock the Notifications