கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த பராலகேமுந்தியில் உள்ளது மஹேந்திரகிரி. கிழக்கு மலைத் தொடர்களின் ஒரு பகுதியான இதில் இயற்கையான ஒலிகளும், காட்சிகளும் நிறைந்திருக்கின்றன. இந்த மலை உச்சி ராமாயணம், மகாபாரதம் ஆகிய புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பல புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த இடம் இயற்கை அழகிற்காகவும் அறியப்படுகிறது. பாண்டவர்களால் கட்டப்பட்டதாக அறியப்படும் கோவில்களின் மிச்சங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன. சிவராத்திரி சமயங்களில் இங்கு வருவது சிறப்பாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications