தப்தபாணி என்றால் வெந்நீர் என்று பொருள். பெஹ்ராம்பூரில் இருந்து 50கிமீ தொலைவில் இருக்கும் இந்த ஊற்றுக்கு சென்று பயணிகள் இயற்கையான சுடுநீரில் குளிக்கலாம்.
அதிக சல்ஃபர் இருப்பதால் இங்கு குளிப்பது கைவலி, கால்வலி, மூட்டுவலிகள், தோல்வியாதிகளுக்கு பல வகைகளில் நன்மை தருவதாக நம்பப்படுகிறது.
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் கடல் மட்டத்தில் இருந்து 1800 அடி உயரத்தில் உள்ள இந்த ஊற்றுக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். சிவன் கோவிலும், கண்டி மாதா ஆலயமும் அருகிலேயே உள்ளன. பக்கத்திலேயே அரசால் நிர்வகிக்கப்படும் மான் பூங்கா ஒன்றும் உள்ளது.



Click it and Unblock the Notifications