Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பத்ரா » ஈர்க்கும் இடங்கள் » பத்ரா காட்டுயிர் சரணாலயம்

பத்ரா காட்டுயிர் சரணாலயம், பத்ரா

21

பயணிகள் பத்ராவதிக்கு விஜயம் செய்யும்போது இந்த பத்ரா காட்டுயிர் சரணாலயத்துக்கு தவறாமல் விஜயம் செய்வது அவசியம். இந்த பிரதேசத்தில் ஓடும் பத்ரா ஆற்றின் அடையாளமாக இந்த காட்டுயிர் சரணாலயத்துக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

490 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த சரணாலயம் மேற்குத்தொடர்ச்சி மலையின் வறண்ட மற்றும் ஈர இலையுதிர் காடுகளை உள்ளடக்கியுள்ளது. 1951 ம் ஆண்டில் இது ஜகரா இயற்கை வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு பின்னர் 1974ம் ஆண்டு பத்ரா காட்டுயிர் சரணாலயம் என்று மாற்றப்பட்டு 1998ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பு திட்டத்துக்கான காட்டுப்பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பலவிதமான விலங்குகளான சிறுத்தை, யானை, காட்டெருமை, சாம்பார் மான், புலி, மான், முள்ளம்பன்றி போன்றவை இங்கு வசிக்கின்றன. மேலும் பறவையினங்களில் தெற்குப்பிரதேச பச்சைப்புறா, மரகதப்புறா, மலபார் கிளி, மலை மைனா மற்றும் கறுப்பு மரங்கொத்தி போன்றவை இங்கு காணப்படுகின்றன.

ஊர்வன வகைகளில் கரு நாகம் (ராஜ நாகம்), இந்தியமலைப்பாம்பு போன்றவையும், வண்ணத்துபூச்சி வகைகளில் ஆரஞ்சு இறகு வண்ணத்துபூச்சி, மூங்கில் பழுப்பு வண்ணத்துபூச்சி, புளூ பான்சி வண்ணத்துபூச்சி போன்ற அரிய வகைகளும் இங்கு உள்ளன.

பலவித மலர்த்தாவரங்களோடு இங்கு நாவல் மரம் போன்ற பெரு மரங்களும் அதிக அளவில் நிறைந்துள்ளன. இது தவிர தேக்கு, இந்திய கினோ மரம், பனை மரம், கருங்காலி மரம், புன்னை மரம் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed