இந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான பாங்கேபிஹாரி கோயில் பரத்பூர் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த கோயில் கிருஷ்ண பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பிரிஜ் கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்டிருக்கின்றது.
இதன் பிரதான மண்டபத்தில் கிருஷ்ண பகவான் அவருடைய துணை ராதாவுடன் ஜோடியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அதோடு இந்த பிரதான மண்டபம் செல்லும் வழியில் கிருஷ்ணரின் குழந்தைப் பருவ ஓவியங்களை நீங்கள் பார்க்கலாம். இதுதவிர பல்வேறு கடவுள்களின் ஓவியங்கள் கோயிலின் சுவர்களிலும், மேற்கூரைகளிலும் தீட்டப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications