கோபால் பவன் கலைத்துவமான பாணியில் வடிவமைக்கப்பட்டு 1760-ஆண்டு கட்டப்பட்ட அற்புதமான கலைப்படைப்பாகும். இதன் வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் கவின் கொஞ்சும் தோட்டங்களும், பின்பக்கத்தில் சவான் மற்றும் படோன் எனும் காட்சிக்கூடங்கள் சூழ அமைந்திருக்கும் கோபால் சாகர் என்ற கட்டிடமும் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.
மேலும் தோட்டத்தின் முன்பு உள்ள மேல்தளத்தின் நுழைவாயில் சலவைக் கற்களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் பாங்கு அலாதியானது. இந்த நுழைவாயில் முகாலயர்களை வென்றதின் வெற்றிச் சின்னமாக சுராஜ் மாலை மகாராஜாவால் இங்கு கொண்டுவரப்பட்டது.
கோபால் பவன் வளாகத்தில் ஒரு விருந்து மண்டபமும் இருக்கிறது. இந்த மண்டபத்தில் பண்டைய காலப் பொருட்கள், நினைவுப் பொருட்கள் மற்றும் விக்டோரியன் காலத்து பொருட்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த மணடபத்தில் இருந்து நீர் ஊற்றுகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கும் ஆள்குளம் ஒன்றை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications