Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போபால் » ஈர்க்கும் இடங்கள் » அரசு தொல்பொருள் அருங்காட்சியகம்

அரசு தொல்பொருள் அருங்காட்சியகம், போபால்

30

போபால் நகரத்தின் அரசு தொல்பொருள் அருங்காட்சியகம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பொறாமைப்படத்தக்க தொல்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவைகளை கொண்டிருக்கும் அருங்காட்சியகமாகும்.

மேலும், இங்கிருக்கும் மத்தியப் பிரதேசத்தின் பொக்கிஷம் போன்ற ஓவிய கலைப் பொருட்கள் இம்மாநிலத்தின் கலாச்சார வரலாற்றைப் படம் போட்டுக் காட்டுவதாக இருக்கும்.

இந்த மியூசியத்திற்குள் ஒரு முறை சுற்றிப் பார்க்கும் போது, புத்தர் மற்றும் லட்சுமியின் சிலைகளும், இந்து மும்மூர்த்தி கடவுள்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஷ்வரர் ஆகியோரின் படங்களையும், சிவ பெருமானுடன் பார்வதி தேவி இருக்கும் மனதை கவரத்தக்க படமும், 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சமய சிற்பங்களும், கஜுராகோ ஜோடியின் சிற்பங்களும், மற்றும் பல சிறந்த கலைப் பொருட்களும் ஒரே இடத்தில் உள்ள இடமாக காண முடியும்.

இந்த மியூசியத்தில் இருக்கும் வரலாற்றுப் பொருட்களை காணும் பார்வையாளர்கள் அவற்றில் வியந்து பேச்சற்றுப் போய்விடுவார்கள். திங்கள் கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர பிற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இந்த அருங்காட்சியகம் பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.

நம் நாட்டின் வளமான வரலாற்றை தெளிவாக விவரிக்கும் திறன் கொண்ட இந்த அருங்காட்சியகத்திற்கு நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் கண்டிப்பாக வருகை தர வேண்டும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed