போபாலில் உள்ள மண்டல அறிவியல் மையம் (RSCB) iஷமாலா மலைகளின் மேல் அமைந்துள்ளது மற்றும் இது தேசிய அறிவியல் அருங்காட்சியக குழுவின் (NCSM) முக்கியமான பகுதியாக உள்ளது.
பள்ளிக்கு செல்லும் சிறார்களிடம் பல்வேறு வகையான அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இந்த மையத்தில் பல்வேறு அறிவியல் சாதனங்களைப் பற்றிய 266-க்கும் அதிகமான அறிவியல் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல்வேறு மாதிரிகளும் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் பொருட்டாக காட்சி-கேட்பு (Interactive) வழிமுறைகளை கையாண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஐந்து ஏக்கர் பரப்பளவுடைய இடத்தில் 3 ஏக்கர்கள் அறிவியல் பூங்காவாக உள்ளது. இந்த பூங்காவில் காற்றாலை உட்பட 60 விதமான அறிவியல் மாதிரிகளும், உருளை கப்பியின் (Pulleys) செயல்பாடு பற்றிய இயந்திர அமைப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், டைனோசர்களின் தோற்றம் மற்றும் அழிவைப் பற்றி விளக்கும் டைனோசர் பூங்காவும் இங்கு உள்ளது. மிகவும் இளம் சிறார்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு RSCB-ன் வளாகத்திற்குள்ளேயே ஒரு சிறிய விலங்கியல் பூங்காவும் உருவாக்கப்பட்டுள்ளது.