போபால் நகரத்தின் மத்தியில் வான் விஹார் தேசிய பூங்கா அமைந்துள்ளது. நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு மலையின் மீது 445 ஹெக்டேர்கள் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளிடம் சற்றே பிரபலமாக விளங்கும் இந்த பூங்காவிற்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரக் கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த பூங்காவில் மென்மையாக நிமிர்ந்து நிற்கும் பசும் புல்வெளிகள் வருடம் முழுவதுமே பசுமையாக இருக்கும். இந்த பூங்காவில் பல்வேறு வகையான தாவர மற்றும் ஊண் உண்ணிகள் தங்களுடைய இயற்கையான வாழிடங்களில் வசித்து வருவதை உங்களால் காண முடியும்.
எனினும், இங்கு வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளை காணும் போது இது ஒரு தேசிய பூங்காவைப் போல் இல்லாமல் ஒரு விலங்கியல் பூங்காவைப் போலவே தோற்றமளிக்கிறது.
மேலும், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்ட பல்வேறு தாயில்லா விலங்குகளுக்கும் ஆதரவு இல்லமாக இந்த பூங்கா விளங்குகிறது.
பிற விலங்கியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு மாற்றாக வேறு சில விலங்குகளும் இந்த பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த இடம் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் வருவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும்.



Click it and Unblock the Notifications