விஷ்ணுபாத் கோயில் எனும் முக்கியமான கோயில் அமைந்திருப்பதால் கயா நகரம் ஹிந்துக்களுக்கான ஒரு முக்கியமான புண்ணிய யாத்திரை ஸ்தலமாக விளங்குகிறது. 40 செ.மீ நீளத்துக்கு காணப்படும் தரம்சிலா எனும் விஷ்ணுபஹவானின் பாதச்சுவடைச்சுற்றி இந்த கோயில் கட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பசால்ட் பாறை அமைப்பில் பொதிக்கப்பட்டிருக்கும் இந்த கால்தடம் ஒரு வெள்ளிமுலாம் பூசப்பட்ட கலத்தின் நடுவே வைக்கப்பட்டிருக்கிறது. 220 வருடங்கள் பழமையான இந்த கோயில் ஃபால்கு ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications