ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பொகரோ எஃகு தொழிற்சாலை மிகவும் புகழ்பெற்றது. ஏனெனில் இது சுதேசி இயக்கம் காரணமாக ஏற்படுத்தப்பட்ட முதல் எஃகு தொழிற்சாலை ஆகும்.
இந்த உருக்கு ஆலை , சோவியத் உதவியுடன் நிறுவப்பட்ட பின்னர் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) உடன் இணைக்கப்பட்டது. மேலும் இது நாட்டின் நான்காவது ஒருங்கிணைந்த பொது துறை உருக்கு ஆலையாக உள்ளது.
இந்த எஃகு தொழிற்சாலையில் முதலாவது பாய்லர் 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி தொடங்கப்பட்டது. தற்பொழுது இந்த ஆலையில் ஐந்து பாய்லர்கள் உள்ளன.
இந்த பொகரோ எஃகு தொழிற்சாலையில் சூடான சுற்றப்பட்ட சுருள்கள் , சூடான சுற்றப்பட்ட தகடுகள், சூடான உருளை தாள்கள், குளிரான சுற்றப்பட்ட சுருள்கள், குளிரான சுற்றப்பட்ட தாள்கள் போன்ற பொருட்கள் உற்பத்த்தி செய்யப்படுகின்றன.



Click it and Unblock the Notifications