பரந்த வெளியை கொண்டுள்ள இந்த ஜவஹர் நேரு உயிரியல் பூங்காவானது 1989-ம் ஆண்து உருவாக்கப்பட்டது. இந்த உயிரியல் பூங்காவில் பல்வேறு இனங்களை சேர்ந்த உயிரினங்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான இது சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றது. இந்த ஜவஹர் நேரு உயிரியல் பூங்காவில் ஆசிய சிங்கங்கள், வெள்ளை புலிகள் மற்றும் ராயல் பெங்கால் புலிகள் போன்ற அரிய வகை வன விலங்குகள் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன.
இந்தப் பூங்காவில் பறவைகள் மற்றும் மிருகங்களை தவிர்த்து மனிதனால் உருவாக்கபப்பட்ட ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் பயணிகள் படகுச் சவாரியில் ஈடுபட்டு களிக்கலாம். அதனை தவிர்த்து குழந்தைகளை மகிழ்விக்கும் பொருட்டு மொவ்க்ஹில் எக்ஸ்பிரஸ் என்கிற பொம்மை ரயிலும் இயக்கப்படுகின்றது.



Click it and Unblock the Notifications