உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் இந்த சிக்கந்தராபாத் நகரம் உள்ளது. இது மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களோடும் நல்ல முறையில் போக்குவரத்து வசதிகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வரலாற்று நகரம் சிக்கந்தர் லோதி எனும் மன்னரால் 1498ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. சிஷ்டி சாஹேப் உள்ளிட்ட பல உன்னத வரலாற்றுச்சின்னங்கள் இந்த நகரத்தில் காணப்படுகின்றன.
தற்போது ஒரு முக்கிய தொழில் நகரமாக விளங்கும் இந்நகரத்தில் பல குளிர்சேமிப்பு கூடங்களும் குழாய் தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. பால் உற்பத்தியில் இந்த நகரம் ஒரு முக்கிய கேந்திரமாக விளங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications