பைந்தூர் வரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ஷித்தீஜா நேசர தாமா. இது உடுப்பியிலிருந்து 92 கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இதை சுற்றிக் காணப்படும் பனை மரங்களும், தென்னை மரங்களும் தொடுவானத்தை ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்க போவது போல் காட்சிக்கு தெரியும்.
ஷித்தீஜா நேசர தாமா தற்போது வனத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இங்கு வரும் பயணிகளுக்கு மலிவு விலையில் வசதியான தங்குமிடங்களும், உணவும் கிடைக்க வனத்துறையே ஏற்பாடும் செய்துள்ளது.
தாமாவின் இயற்கை அழகையும், நறுமணமிக்க தென்றல் காற்றையும் அனுபவிக்க விரும்புவோர் கண்டிப்பாக இங்கு இரண்டொரு நாள் தங்குவதே சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications