Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்மகளூர் » ஈர்க்கும் இடங்கள் » அம்ருதேஷ்வரா கோயில்

அம்ருதேஷ்வரா கோயில், சிக்மகளூர்

48

சிக்மகளூருக்கு வருகை தரும் பயணிகள் நேரம் இருப்பின் இங்கிருந்து 67 கி.மீ வடக்கில் உள்ள அம்ருதேஷ்வரர் கோயிலுக்கும் சென்று சுற்றிப்பார்த்து மகிழலாம். இந்த புண்ணிய யாத்ரீக ஸ்தலம் 1196 ம் ஆண்டு ஹொய்சள வம்சத்தை சேர்ந்த இரண்டாம் வீர பல்லால’ என்ற அரசரால் கட்டப்பட்டுள்ளது.

 

இந்த கோயிலுக்கு இதைக்கட்டிய சிற்பியான அம்ருதேஷ்வர தண்டநாயக’வின் பெயர் வைக்கப்பட்டுள்ளது ஒரு ஆச்சரியமான விஷயமாகும். இந்த கோயிலில் ஏக கூட பாணியில் வடிவமைக்கப்பட்ட ஒரு விமானம்(கூரை), ஒரு திறந்த மண்டபம், மற்றும் முற்றத்துடன் இணைக்கப்பட்ட ஒரு மூடிய மண்டபம்   போன்றவை காணப்படுகின்றன.

இதில் மூடிய மண்டபத்தில் விதானத்துடன் கூடிய 9 தளங்களும், திறந்த மண்டபத்தில் 29 தளங்களும் காணப்படுகின்றன. பயணிகள் இந்த கோயிலில் கீர்த்திமுகங்கள் எனப்படும் அசுரவம்ச சிற்பங்கள் நிறைந்திருப்பதை காணலாம்.இந்த கோயிலின் பிரதான விசேஷம் குடையப்பட்ட தூண்கள் இங்குள்ள மண்டபத்தின் கூரையை தாங்கி நிற்பது ஆகும். நெருங்கி பார்க்கும் போது மண்டபத்தின் கூரை உட்புறத்தில் நுட்பமான மலர் அலங்கார வடிவமைப்புகள் உள்ளதை காணலாம்.

திறந்த மண்டபத்தில் இந்து புராண பாத்திரங்களின் சிற்பங்களைக்கொன்ட 140 சதுர வடிவமைப்புகள் காணப்படுகின்றன. வலது புற சுவற்றில் மஹாபாரத சம்பவங்களும் கிருஷ்ண பகவானின் வாழ்க்கை சம்பவங்களும் பொதிக்கபட்டுள்ளன.

மேலும் சுவற்றின் தெற்கு பகுதியில் ராமாயணத்தின் நிகழ்வுகள் வலமிருந்து இடமாக பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த கோயிலுக்கு வரும் பயணிகள் அருகிலுள்ள பத்ரா ஆற்று அணையையும் சென்று பார்க்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu