திருப்புணித்துறாவில் அமைந்துள்ள இந்த பூர்ணதிரயேசா கோயில் சோட்டணிக்கராவுக்கு அருகிலுள்ள முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்றாகும். இது விஷ்ணுவின் அவதாரமான பூர்ணதிரயேசா எனும் கடவுளுக்காக எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இக்கோயிலில் ஏற்பட்ட ஒரு தீ விபத்துக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட கட்டுமானமே நாம் தற்போது பார்க்கும் கோயில் வடிவமாகும்.
1000 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுப்பின்னணியை இந்த கோயில் கொண்டுள்ளது. வரலாற்றுக்குறிப்புகளின்படி கொச்சியை ஒருகாலத்தில் ஆண்ட பெரும்படப்பு ஸ்வரூபம் வம்சத்தாரின் குலதெய்வமாக இந்த பூர்ணதிரயேசா தெய்வம் விளங்கியதாக சொல்லப்படுகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் அவர்களது வேண்டுதல் நிறைவேறும் என்றும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.
இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடத்தப்படும் பல திருவிழாக்கள் ஏராளமான பக்தர்களை ஈர்க்கின்றன. இவற்றில் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் விருச்சிகோத்சவம் முக்கியமானதாக கருதப்படுகிறது. விழாக்கொண்டாட்டங்களை பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் இக்காலத்தில் இந்த கோயிலுக்கு விஜயம் செய்வது நல்லது.



Click it and Unblock the Notifications