கி.பி.1747-1765-ல் இந்தப் பகுதியை ஆட்சி செய்த அரசர் உமேத் சிங்-கினால் கட்டப்பட்ட ஆக்ஹாண்ட் சாண்டி அரண்மனை சம்பா அரச குடும்பத்தினரின் இருப்பிடமாக இருந்த இடமாகும்.
பின்வந்த காலங்களில் ராஜா சாம் சிங்-கினால், பிரிட்டிஷ் பொறியாளர்களின் உதவியுடன் இந்த இடம் புதுப்பிக்கப்பட்டது. அவருடைய வாரிசுகள் இந்த அரண்மனையை மாநில அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டனர்.
ஒரு காலத்தில் இந்த அரண்மனையின் சுவர்களில் கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியங்களுக்காக இந்த இடம் மிகவும் புகழ்பெற்றதாக இருந்தது. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த அரண்மனையின் கலைப்பொருட்கள் இன்று பாழடைந்த நிலையில் இருக்கிறது.
இந்த அரண்மணையின் பெரிய மேற்கூரை அந்த காலகட்டத்தில் நிலவிய கலைநயமிக்க வேலைப்பாடுகளை கொண்டுள்ளதை காணும் போது இந்த இடத்தின் அருமை எளிதில் புலப்படும். இந்த இடத்தில் அமைந்துள்ள கோவில்கள் மற்றும் தங்குமிடங்கள் பார்க்கத்தகுந்த பிற இடங்களாகும்.



Click it and Unblock the Notifications