தரையிலிருந்து 80000மீ உயரத்தில் GPO-க்கு மேலே காந்தி சௌக்கில் அமைந்துள்ள காலாடாப் டல்ஹெளசியின் முதன்மையான சுற்றுலாதலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த இடத்தில் வருடம் முழுவதும் பனிப்பொழிவு இருக்கும். பனியின் காரணமாக ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் செல்ல முடியாதாகையால் இவ்விடத்திற்கு நடந்து செல்வதே வசதியானதாக இருக்கும்.
சாகசத்ததை விரும்புபவர்கள் மலையேற்றத்தில் பயிற்சி பெற்றவர்களை துணைக்கு வைத்துக் கொண்டு 3 நாட்களில் கஜ்ஜாரை அடைய முடியும். மலையேற்றத்தை விரும்பாதவர்கள் இந்த இடத்தின் இயற்கையழகை கண்டு ரசித்திடலாம்.
மேல் நகோரோட்டா மலைகளின் வழியாக சுற்றுலாபயணிகள் லக்கரமாண்டியை அடைந்திட முடியும். இந்த இடத்திற்கு செல்லும் வழியில் சுற்றுலாபயணிகள் திபெத்திய கைவினைப் பொருட்கள் கிடைக்கும் மையத்தையும், டல்ஹெளசி உருளைக்கிழங்கு பண்ணையையும் மற்றும் டல்ஹெளசி நீர்திட்டத்தையும் பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
இது மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகள், ராணுவ முகாமாக இருக்கும் தயாகுந்த் சிகரத்தையும் காண முடியும். பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இதில் உள்ள புல்வானி மாதா கோவில், இந்த இடத்தின் மற்றுமொரு அடையாளச் சின்னமாகும். எனவே இங்கிருக்கும் கோவிலுக்கு செல்ல பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.



Click it and Unblock the Notifications