Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டல்ஹெளசி » ஈர்க்கும் இடங்கள் » காலாடாப் வனவிலங்கு சரணாலயம்

காலாடாப் வனவிலங்கு சரணாலயம், டல்ஹெளசி

71

காலாடாப் வனவிலங்கு சரணாலயம், காலாடாப் காஜ்ஜர் சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது, இது டல்ஹெளசியில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் 1962 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த சரணாலயம் முழுவதும் தியோதர் மரங்களால் மூடப்பட்டிருப்பது அதன் பசுமையை விளக்குவதாக இருக்கும்.

இந்த வனப்பகுதிகளில் பைன், பிர் மற்றும் தியோதர் மரங்கள் பெரும்பாலாக காணப்படுகின்றன. இங்கு காணப்படும் பல்வேறு விதமான விலங்குகள் மற்றும் பறவையினங்கள் இவ்விடத்தை சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் அம்சமாக இருக்கின்றன.

இந்த சரணாலயத்தில் பல்வேறு வகைகளிலான சிறுத்தைகள், கரடிகள், மான்கள், அணில்கள், குரைக்கும் மான்கள், செரோவ், லாங்குர் குரங்குகள், நரிகள் மற்றும் இமாலய கருப்பு மார்ட்டென்கள் ஆகிய விலங்குகளை காணலாம். மேலும் பறவைகள் பெருமளவில் இங்கு வசிப்பதால் பறவை ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கமாக இவ்விடம் கருதப்படுகிறது.

வடக்கு நோக்கி பாய்ந்து செல்லும் ராவி நதியினூடாக ஒரு அழகான ஓடை சந்திக்கும் இடத்தை இந்த சரணாலயத்தில் காணலாம். இந்த பகுதி முழுவதுமாக சுற்றிப்பார்க்க பார்வையாளர்களுக்கு குறைந்தது 3 முதல் 6 மணி நேரம் பிடிக்கும்.

பார்வையாளர்கள் இங்கு நடந்து செல்வது மிகவும் புகழ்பெற்ற பொழுதுபோக்காக இருப்பதால், இந்த சரணாலயத்தின் சாலைகள் நல்ல வகையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வனப்பகுதிக்குள் வாகனங்களில் செல்வதற்கு சம்பா மாவட்டத்தின் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். மார்ச், மே, செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்கள் இந்த சரணாலயதிற்கு வருகை தர ஏற்ற மாதங்களாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed