Search
  • Follow NativePlanet
Share

டார்ஜீலிங் – இந்தியாவின் தேயிலைச்சொர்க்கம்!

28

டார்ஜீலிங் நகரத்தின் சிறப்பை அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு அம்சங்களுக்காக புகழ் பெற்ற ஒரு மலைவாசஸ்தல நகரமாக இது புகழ்பெற்று விளங்குக்கிறது.

ஹாலிவுட் மற்றும் திரைப்படங்களில் அதிகமாக இடம் பெற்றுள்ள இந்திய மலைநகரம் எனும் அடையாளத்தையும் இது கொண்டுள்ளது. இயற்கை அழகை பார்த்து ரசிக்க வசதியாக இங்கு இயக்கப்படும் டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே உலகப்பிரசித்தி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்காள மாநிலத்தின் வடகோடியில் இந்த மலைநகரம் வீற்றிருக்கிறது. சிறு இமாலயம் அல்லது மஹாபாரத் மலைத்தொடர்கள் எனப்படும் மலைப்பிரதேசத்தில் எத்திசையிலும்  பனி மூடிய மலைச்சிகரங்கள் சூழ்ந்திருக்க இந்த நகரம் காட்சியளிக்கிறது.

ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலிருந்தே ஒரு உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகவும், தரமான தனித்தன்மையான தேயிலை விளையும் பூமியாகவும் இது அறியப்பட்டு வந்திருக்கிறது. இந்நகரத்திலிருந்து பல்வேறு ரகங்கள் மற்றும் தர வகைகளில் உலகமெங்கும் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வார் மெமோரியல் (போர் நினைவுச்சின்னம்)

தற்காலத்தில் அமைதி பூமியாக காட்சியளித்தாலும் டார்ஜீலிங் நகரம் போர்கள் நிரம்பிய வரலாற்றுப்பின்னணியை கொண்டிருக்கிறது. இன்றும் கூட கோர்க்காலேண்ட் இயக்கம் அவ்வப்போது வன்முறை சம்பவங்களை இங்கு அரங்கேற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது.

பனிச்சிகரங்கள் பின்னணியில் எழும்பியிருக்க கம்பீரமாக நிறுவப்பட்டிருக்கும் இந்த போர் நினைவுச்சின்னத்துக்கு விஜயம் செய்ய பயணிகள் மறக்கக்கூடாது. புகைப்படக்கலை ரசிகர்களுக்கு இது மிகவும் பிடித்தமான ஸ்தலம் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

டார்ஜீலிங் இயற்கை அழகு

இந்திய இயற்கை ரசிகர்கள் வாழ்நாளில் ஒரு முறை விஜயம் செய்தே ஆக வேண்டிய மலை எழிற்பிரதேசங்களில் ஒன்றுதான் இந்த டார்ஜீலிங். சால் மற்றும் ஓக் மரங்கள் நிறைந்த மித வெப்ப காடுகள் இப்பகுதியில் நிரம்பியுள்ளன.

பருவநிலை வேறுபாடு நிகழ்கின்ற போதிலும் பசுமை மாறாமல் காணப்படும் இந்த வனப்பகுதி டார்ஜீலிங் மலைவாசஸ்தலத்தின் எழிலை கூட்டுகின்றன. பத்மஜா நாயுடு ஹிமாலயன் ஜுவாலஜிகல் பார்க் மற்றும் லாயிட்’ஸ் பாடனிகல் கார்டன் போன்றவை இங்கு இயற்கை ரசிகர்கள் மற்றும் புகைப்பட ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன.

மாலை நேரத்தை இந்த பூங்காக்களில் கழிக்கும் அனுபவம் ஈடு இணையற்றது எனலாம். ஏற்றுமதி தரம் கொண்ட ஆர்க்கிட் மலர்ச்செடிகளுக்கும் டார்ஜீலிங் நகரம் பிரசித்தி பெற்றுள்ளது. எனவே பயணிகள் தங்கள் அன்புக்குரிய துணைகளுக்கு வண்ணமயமான புத்தம்புதிய மலர்களை பரிசளித்து மகிழ்ச்சியூட்ட தடையேதுமில்லை.

காட்டுயிர் அம்சங்கள்

மேற்கு வங்காள மாநிலத்தின் வனத்துறை நிர்வாகம் இந்த மலைவாசஸ்தலத்தின் காட்டு வளங்களை பேணுவதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டுள்ளது.

இப்பகுதியில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், யானைகள், இந்திய புலி, சிறுத்தை மற்றும் பன்றி மான் போன்றவை உயிரினங்கள் வசிக்கின்றன. பறவை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இங்கு சில அபூர்வமான புலம்பெயர் பறவைகளும் தென்படுகின்றன.

ஷாப்பிங், கலாச்சாரம் மற்றும் உள்ளூர் கொண்டாட்டம்

டார்ஜீலிங் நகரத்தில் உள்ள மால் ரோட் எனும் சாலை பயணிகள் விரும்பக்கூடிய எல்லா ஷாப்பிங் அம்சங்களையும் கொண்டுள்ளது. பேரம் பேசும் திறமை மிக்கவர்கள் அதை இங்கு நண்பர்களுக்கோ குடும்பத்தினர்க்கோ நிரூபித்துக்காட்டலாம்.

உள்ளூர் மக்கள் கேளிக்கையை விரும்பக்கூடியவர்களாக நட்புணர்வு கொண்டவர்களாகவே உள்ளனர். இங்கு முக்கிய இந்திய பண்டிகைகளான துர்க்கா பூஜா, தீபாவளி மற்றும் காளி பூஜா போன்றவை கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன.

இவை தவிர சில உள்ளூர் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களும் இங்கு பிரசித்தம். அது மட்டுமல்லாமல், நீங்கள் எப்போது இந்த டார்ஜீலிங் நகரத்திற்கு விஜயம் செய்தாலும் ஏதோ ஒரு சிறு கொண்டாட்ட வைபவம் நகரத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள பௌத்த மடாலயங்கள் இப்பகுதியில் கலாச்சார பின்னணியை தெரிந்து கொள்ள உதவும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக பௌத்த குருமார்கள் இவ்விஷயங்களை பயணிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் விளக்குவதில் ஆர்வம் மிகுந்தவர்களாக உள்ளனர்.

உணவு

மோமோ எனும் தின்பண்டம் இந்நகரத்தில் வெகு பிரசித்தம். சிக்கன், பீஃப், போர்க் மற்றும் காய்கறிகள் பொதிக்கப்பட்டு சமைக்கப்படும் இந்த உருண்டைகள் காரமான சாஸ் உடன் பரிமாறப்படுகிறது.

மற்ற உள்ளூர் உணவு வகைகளையும் பயணிகள் தவறாமல் சுவைப்பது அவசியம். நூடுல்ஸ் கலந்த சூப் வகைகள் மற்றும் காரமான அரிசி உணவு வகைகள் இங்கு கிடைக்கும் சாலையோர உணவு வகைகளாகும். இவற்றையும் சுற்றுலாப்பயணிகள் முயற்சிக்கலாம்.

காலனிய கட்டிடக்கலை அம்சங்கள்

ஆங்கிலேயர் காலத்தில் முக்கிய நகரமாக விளங்கியதால் இந்த நகரம் முழுதுமே ஐரோப்பிய கட்டிடக்கலை அம்சங்களுடன் தோற்றமளிக்கிறது.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மாளிகைகள் மற்றும் கட்டிடங்கள் யாவும் அப்படியே மெருகு குலையாமல் வீற்றிருக்கின்றன. இவற்றை பார்த்து ரசிப்பதும் புகைப்படம் எடுப்பதும் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான பொழுதுபோக்காக அமையும்.

டார்ஜீலிங் மக்கள் மற்றும் சுற்றுலா சிறப்பு

டார்ஜீலிங் நகர மக்கள் உல்லாசமான பரபரப்பற்ற வாழ்க்கையை பின்பற்றுவர்களாக உள்ளனர். இசைக்கருவிகளை இசைப்பதில் இவர்களுக்கு அதீத நாட்டம் உண்டு.

சிறிய தெருக்களில் உள்ள கிளப்களிலும் கூட இங்கு இசைக்குழுக்கள் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்திக்கொண்டிருப்பதை காணலாம். இசை என்பது இவர்களது கலாச்சாரத்தோடு ஒரு நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதை பயணிகள் புரிந்து ரசிக்க முடியும்.

டார்ஜீலிங் நகரத்தை ஒட்டி வேறு பல முக்கிய சுற்றுலா அம்சங்கள் அமைந்திருப்பதும் ஒரு சிறப்பம்சமாகும். மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு நகரங்களுக்கு விஜயம் செய்ய விரும்புபவர்கள் இந்த டார்ஜீலிங் நகரத்தில் தங்கிக்கொண்டு விரிவான சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.

முக்கிய சுற்றுலா அம்சங்கள்

டார்ஜீலிங் நகரத்தில் சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய ஏராளமான அம்சங்கள் உள்ளன. இவற்றில் ஹேப்பி வாலி டீ எஸ்டேட், லாயிட்’ஸ் பாடனிகல் கார்டன், டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே, படாஸியா லூப் மற்றும் வார் மெமோரியல், கேபிள் கார், புதியா பஸ்தி கொம்பா மற்றும் ஹிமாலயன் மவுண்டனீரிங்க் இன்ஸ்டிடியூட் அன்ட் மியூசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

டார்ஜீலிங் நகரத்திற்கு எப்படி செல்வது

மேற்கு வங்காள மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களுடனும் டார்ஜீலிங் நகரம் போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது.

மிகப்பிரபலமான மலைவாசஸ்தலம் என்பதால் போக்குவரத்து சிரமம் ஏதும் பயணிகளுக்கு இருக்கப்போவதில்லை. எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த மலைவாசஸ்தலத்துக்கு சுலபமாக வரமுடியும்.

டார்ஜீலிங் – பருவநிலை

மற்ற இந்தியப்பகுதிகளை போன்று பொதுவாக கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகிய மூன்று முக்கிய பருவங்களை இந்த மலைநகரம் கொண்டுள்ளது. கோடைக்காலம் மிதமான வெப்பத்துடனும் குளிர்காலம் கடுமையான குளிருடனும் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

டார்ஜீலிங் சிறப்பு

டார்ஜீலிங் வானிலை

சிறந்த காலநிலை டார்ஜீலிங்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது டார்ஜீலிங்

  • சாலை வழியாக
    டார்ஜீலிங் நகரத்தை தேசிய நெடுஞ்சாலை 31 வழியாக சென்றடையலாம். அது மட்டுமல்லாமல் சிலிகுரி மற்றும் காலிம்போங் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 55 ம் உள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    டார்ஜீலிங் நகரம் ரயில் நிலையம் ரயில் பயணத்துக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. இது தவிர அருகிலுள்ள பெரிய ரயில் நிலையமாக ஜல்பய்குரி ரயில் நிலையமும் இருக்கிறது. இங்கிருந்து சிலிகுரி மற்றும் நாட்டிலுள்ள இதர முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சிலிகுரி விமான நிலையம் டார்ஜீலிங் நகரத்தை ஒட்டி உள்ளது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை கொண்டுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat