தேஷ்நோக் கிரமாம் மற்றும் ராஜஸ்தான் முழுவதுமே நடைபெறும் திருவிழாக்களில் கங்காவ்ர் திருவிழா மிகவும் வண்ணமயமான விழாக்களில் ஒன்று. இந்தத் திருவிழா கௌரி மாதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், தங்கள் கணவர்மார்களின் நலனுக்காகவும் பெண்களால் கொண்டாடப்படுகிறது.
இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அப்போது பெண்கள் தங்கள் கைகளையும், கால்களையும் மெஹந்தியை கொண்டு அலங்கரித்துக் கொண்டு தேவலோக மங்கயர்களை போல மிகவும் அழகாக தோற்றமளிப்பார்கள்.



Click it and Unblock the Notifications