தேவிகுளம் வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தேவிகுளம் ஏரி என்று பிரபலமாக அறியப்படும் சீதா தேவி ஏரியை தவற விட்டுவிடக் கூடாது. இதன் தாதுப் பொருட்கள் நிறைந்த நீரில் நோய் தீர்க்கும் தன்மை உள்ளதாக கருதப்படுகிறது. அதோடு இந்த ஏரிப்பகுதியில் காணப்படும் வெப்ப நீரூற்று தனிமையை விரும்பிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.
சீதா தேவி ஏரி புனிதமாக கருதப்படுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது இந்த ஏரியில் இராமபிரானின் மனைவி சீதா தேவி நீராடினார் என்ற புராணச் செய்தியே ஆகும்.
இங்கு வரும் ஒவ்வொரு பயணியும் இயற்கையின் அற்புதப் படைப்பாய் திகழ்ந்து வரும் இந்த ஏரியின் அழகில் சொக்கிப் போவது நிச்சயம். இந்த ஏரியின் குளிர்ந்த மற்றும் சுத்தமான நீரும், மரங்கள் அடர்ந்த இந்தப் பகுதியில் கேட்கும் பறவைகளின் கீச்சிடும் குரலும் மறக்க முடியாத அனுபவமாக உங்கள் உள்ளங்களில் இன்ப நினைவுகளாய் பதிந்துவிடும்.



Click it and Unblock the Notifications