தன்பாத்தின் முக்கிய சுற்றுலா தளமாக பிர்சா முண்டா பூங்கா இருக்கிறது. அனைத்து வயதினரும் பார்க்கக்கூடிய வகையில் இருக்கும் இந்தப் பூங்கா நவம்பர்2009ல் திறக்கப்பட்டது.
21ஏக்கர் பரப்பளவில் இருக்கும் பூங்காவின் நடைபாதையை முதியவர்களும், விளையாட்டுத் திடலை குழந்தைகளும் விரும்புகிறார்கள். சிற்றுண்டி சாலைகளும் உள்ளேயே அமைந்துள்ளன. இன்னும் பணிகள் முடிவடையாமல் இருந்தாலும் இதுவரையில் 12லட்சத்திற்கும் மேல் வருவாய் ஈட்டிக்கொடுத்திருக்கிறது இந்தப் பூங்கா.
தன்பாதின் முதல் பூங்காவான பிர்சா முண்டா முன்னர் வெற்று நிலமாக இருந்தது. MGNREGA நிறுவனம் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு சுற்றுலா தளமாக மாற்றியுள்ளது. ஓய்வெடுக்கவும், விளையாடவும் சிறந்த இடமாக இந்த தளம் கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications