டியெஜெஃப் கைவினை கிராமம் என்ற பெயருக்கு ஏற்றார்ப்போல இக்கிராமம் கைவினை மற்றும் கைத்தறிக்காக புகழ்பெற்று விளங்குகிறது. இப்பகுதியைச் சேர்ந்த டெனியிமெய் பழங்குடி மக்கள் கைவினைக் கலையில் திறமைசாலிகளாக விளங்குகிறார்கள்.
அரிதான கைவினைக் கலைகள், மரவேலைப்பாடுகள், மூங்கில் வேலைப்பாடுகள் ஆகியவற்றையும் இங்கு காணலாம்.
திமாபூரில் இருந்து 13கிமீ தொலைவில் அமைந்துள்ள டியெஜெஃப் கிராமத்திற்கு வாடகை வண்டிகளும், பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இங்கு கைவினைக் கண்காட்சி மட்டுமல்லாது அவை செய்யப்படும் முறைகளும் பயணிகளுக்கு விளக்கப்படுகிறது.
நாகாலாந்து கைத்தறி மற்றும் கைவினைப்பொருள் வளர்ச்சிக் கழகத்தால் இக்கிராமம் நிர்வகிக்கப்படுகிறது. கலைப்பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களை ஊக்குவிக்கும் வண்ணம் இக்கிராமம் செயல்படுகிறது.
மேலும் உள்ளூர் மக்களும், வெளியூர் மக்களும் பயன்பெறும் வண்ணம் பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications