கைப் சாஹர் ஏரியின் கரையில் அமைந்துள்ள இந்த பாதல் மஹால் எனும் அரண்மனை தன் நுணுக்கமான கட்டிடக்கலை வேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. முகலாய மற்றும் ராஜபுதன கட்டிடக்கலை அம்சங்களை கலந்து இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தாவ்ரா எனப்படும் கற்கள் இதன் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாளிகை மூன்று பிரிவுகள் , மூன்று குமிழ் கோபுரங்கள் மற்றும் ஒரு கூடத்தைக் கொண்டுள்ளது.
இந்த குமிழ் கோபுர அமைப்புகள் ஒரு தாமரை மலர் இதழ் விரித்தாற்போன்று வடிவமைக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மாளிகையின் அழகிற்கும் மெருகூட்டும் விதத்தில் காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications