சோம் மற்றும் மாஹி ஆறுகள் கூடும் இடத்தில் உருவாகியுள்ள படுகையில் இந்த பானேஷ்வர் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலில் சிவன் லிங்க ரூபத்தில் காட்சியளிக்கின்றார்.
மஹா சுக்ல ஏகாதசியிலிருந்து துவங்கி மஹா சுக்ல பௌர்ணமி வரை (பிப்ரவரி மாதம்)இக்கோயிலில் ஒரு பழங்குடி திருவிழா கொண்டாடப்படுகிறது. பானேஷ்வர் திருவிழா என்று பிரசித்தி பெற்றுள்ள இது பீல் வம்சத்தார் மத்தியில் ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. உள்ளூர் பழங்குடி இனத்தாரின் பாரம்பரிய அம்சங்களை பயணிகள் இத்திருவிழாவில் பார்த்து மகிழலாம்.
ஏராளமான பக்தர்கள் பானேஷ்வர் கோயிலில் வழிபடுவதற்கு இத்திருவிழா நாளில் வருகை தருகின்றனர். 1850ம் சம்வாத் வருடத்தில் கட்டப்பட்ட ஒரு விஷ்ணு கோயிலையும் இந்த ஸ்தலத்துக்கு அருகிலேயே பயணிகள் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications