துங்கர்பூர் நகரத்திலிருந்து 58 கி.மீ தூரத்தில் மாஹி நதிக்கரையில் கலியாகோட் எனும் இந்த சிறு கிராமம் அமைந்துள்ளது. பீல் வம்சத்தைச்சேர்ந்த தளபதி ஒருவரின் பெயரால் இக்கிராமம் கலியாகோட் என்றழைக்கப்படுவதாக உள்ளூர் கதைகள் கூறப்படுகின்றன.
இந்த ஊர் முற்காலத்தில் பார்மேர் வம்சம் மற்றும் துங்கார்பூர் ராஜ்ஜியத்திற்கு தலைநகராகவும் விளங்கியுள்ளது. கலியாகோட் கிராமம் இங்குள்ள சையத் ஃபக்ருதீன் சமாதி மாடத்துக்கும் பெயர் பெற்றுள்ளது.பிரசித்தி பெற்ற ஞானியான சையத் ஃபக்ருதீன் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவரது சமாதி மாடம் வெண் பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டு இப்பிரதேசத்தின் கட்டிடக்கலை மேன்மைக்கு உதாரணமாக திகழ்கிறது. இதன் மேற்பகுதியிலுள்ள குமிழ் மாடத்தில் நுணுக்கமான அலங்கார அமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. முஹர்ரம் மாதத்தின் 27வது நாளில் கொண்டாடப்படும் உருஸ் திருநாளின்போது இந்த சமாதி மாடத்திற்கு ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர்.
பயணிகள் கலியாகோட் கிராமத்திலுள்ள விஜய மாதா கோயில், வசுந்தரா தேவி கோயில் மற்றும் ஷீதலா மாதா கோயில் போன்ற இதர கோயில்களுக்கும் விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications