13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள ஒரு அழகான அரண்மனை மாளிகை இந்த ஜுனா மஹால் ஆகும். ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்த அரண்மனை ஒரு கோட்டையைப்போன்ற கட்டிடக்கலை அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் சுவர்களில் கொத்தளம் போன்ற பாதுகாப்பு துவாரங்களோடு கண்ணாடி அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் உட்பகுதியில் வண்ணமயமான குறு ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்களையும் பயணிகள் பார்க்கலாம். குறுகலான நுழைவாயிலைக்கொண்டுள்ள இந்த அரண்மனையில் சிறு குமிழ் கோபுரங்கள் மற்றும் கூடங்கள் ஆகியவை காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications