பேட் துவாரகாவில் உள்ள இந்த ஸ்ரீ கிருஷ்ணா கோயில் 500 வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. பேட் துவாரகா தீவுப்பகுதியை சென்றடைய ஓக்கா படகுத்துறையிலிருந்து பயணிகள் படகுகள் மூலமாக 5 கி.மீ தூரத்தை கடந்து வரவேண்டியுள்ளது.
வல்லபாச்சாரியார் என்பவரால் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த ஸ்ரீ கிருஷ்ணா கோயிலின் உள்ளே ஒரு கருவறை மற்றும் ருக்மணியால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் ஒரு சிலை ஆகியவை அமைந்துள்ளன.
கிருஷ்ணரின் நண்பரான சுதாமா அவல் கொண்டுவந்து கிருஷ்ணருக்கு அளித்திட்ட கதையை நினைவுபடுத்தும்விதமாக இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவலை அர்ச்சர்களுக்கு தானம் செய்யும் வழக்கம் உள்ளது.



Click it and Unblock the Notifications