ஆன்மீக பாடகியாகவும் தீவிர கிருஷ்ண பக்தையாகவும் விளங்கிய மீராபாய்க்கு இந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறிய கோயில் ஜகத் மந்திருக்கு அருகிலேயே மக்கள் குடியிருப்புப்பகுதியின் நடுவே அமைந்திருக்கிறது.
16-ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் பகுதியில் வாழ்ந்த இந்த மீராபாய் ஒரு மன்னனுக்கு மணமுடிக்கப்பட்டதாகவும் ஆனால் தன்னை கிருஷ்ணபஹவானின் காதலியாக கருதி மீராபாய் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.
பின்னர் வடஇந்தியா முழுவதும் மீராபாய் புனித யாத்திரை மேற்கொண்டதாகவும் இறுதியில் துவாரகா நகருக்கு வந்து சேர்ந்த இவர் இந்த ஸ்தலத்திலேயே துவாரகதீஷ் கோயிலில் உள்ள கிருஷ்ணர் சிலையோடு ஒன்றறக்கலந்து விட்டதாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications