பைசாபாத் நவாப்புகளின் தலைநகரமாக இருந்தது. அவர்களுடைய ஆட்சி காலத்தில் பல அற்புதமான நினைவுச்சின்னங்கள் கட்டப்பட்டன. அவற்றுள் இந்த கல்கத்தா கோட்டையும் ஒன்று.
இது 1764ம் ஆண்டு பூக்ஸர் போரில் பிரிட்டிஷாரிடம் தோற்று போன சமயத்தில் சுஜா-உத்-தெளலாவினால் கட்டப்பட்டது. கோட்டையின் கட்டுமானம் மிக முக்கியமான சம்பவமாக கருதப்படுகிறது.
ஏனெனில் போரில் தோற்ற பிறகும் அவர் இந்த பகுதியின் கட்டுப்பாட்டை இழக்கவில்லை. வரலாற்றின் படி, நவாப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அவர்களுடைய மரணம் வரை இந்த கோட்டையில் தான் வாழ்ந்தனர்.
கோட்டையின் சுவர்கள் உள்ளூர் களிமண் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டை முகலாய பாணியில் கட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications