ஃபரித்கோட் நகரத்தின் இதயத்தில் அமைந்துள்ள ராஜ் மஹால், மகாராஜா பிக்ரமா சிங் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்டது. மேலும் இது பல்பீர் சிங் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டது.
இந்த அழகான மற்றும் பிரம்மாண்டமான மாளிகையின் உள்ல காவல் கோபுரங்கள் மற்றும் கண்ணாடி மாளிகைகள் பிரஞ்சு கட்டிடக்கலையின் தாக்கத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.
முன்னதாக, இந்த மஹால் அரச குடும்பத்தின் குடியிருப்பு இடமாக இருந்தது. தற்பொழுது மகாராஜா பிக்ரம சிங்கின் வம்சாவளிகள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த அழகிய மஹால் பச்சை புல்வெளிகளுடனும் அழகிய காவல் கோபுரங்களுடனும் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் வடிவமைக்கபட்டுள்ளது.
இந்த மாளிகையின் சுவர்கள் ஒவ்வொன்றும் பெருமை வாய்ந்த பழங்கால ஓவியங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பாரம்பரியமான கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு 'ராஜ் தியோரி ' என்று பெயர். அந்த கட்டிடத்தில் பல்பீர் மருத்துவமனை என்ற மருத்துவமனை செயல்படுகின்றது.



Click it and Unblock the Notifications