‘ஃப்ளோட்டிங் ரெஸ்ட்டாரெண்ட்’ என்று அழைக்கப்படும் இந்த மிதக்கும் உணவகம் பெயருக்கேற்றபடி நீரில் மிதந்தபடி காட்சியளிக்கிறது. ஜி.டி சாலையை ஒட்டி சிர்ஹிந்த் கால்வாயில் இந்த தனித்தன்மையான உணவகத்தை காணலாம்.
இதில் 8 அறைகள் மற்றும் ஒரு உணவுக்கூடம் ஆகியவை அமைந்துள்ளன. 8000 கியூசெக் நீர் அழுத்தத்தை தாங்கும் அளவிற்கு இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
சுற்றிலும் ரம்மியமான இயற்கைக்காட்சிகள் நிரம்பியுள்ளதால் பயணிகள் இந்த உணவகத்தின் அறைகளில் தங்கி அவற்றை ரசித்தவாறு பொழுதுபோக்கலாம். பஞ்சாப் மாநில சுற்றுலா வளர்ச்சித்துறையால் பராமரிக்கப்படும் இந்த மிதக்கும் உணவகம் கோடைக்காலத்தில் சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications