ரௌஸா ஷரீஃப், ஃபதேஹ்கர் சாஹிப்

ரௌஸா ஷரீஃப் எனும் இந்த வழிபாட்டுத்தலம் சுன்னி முஸ்லிம் இனத்தார் மத்தியில் இரண்டாவது மெக்காவாக வணங்கப்படுகிறது. சிர்ஹிந்த்-பஸ்ஸி பத்தானா சாலையில் அமைந்துள்ளது இது ஷேய்க் அஹமத் ஃபரூக்கி சிர்ஹிந்தி என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

இவர் இப்பகுதியில் 1563 முதல் 1624 வரை வாழ்ந்துள்ளார். இவரது நினைவு தினத்தில் அனுஷ்டிக்கப்படும் உருஸ் திருவிழாவின்போது இங்கு ஏராளமான முஸ்லிம் பக்தர்கள் குழுமுகின்றனர்.

இந்த ஸ்தலத்தில் ஷேய்க் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளும் காணப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் ஆப்கானிய மன்னரான ஷா ஸமன் மற்றும் அவரது ராணியின் சமாதிகளும் இந்த ஸ்தலத்தில் அமைந்திருக்கின்றன.

அற்புதமான தோரணவாயில் கட்டமைப்புகள் மற்றும் குமிழ் மாடக்கோபுரங்களை கொண்டுள்ள இந்த வளாகத்தை ஒரு வரலாற்று சின்னமாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. உஸ்தாத், ஷாஹிர்த் மற்றும் மீருல் மீரான் ஆகியோரது கல்லறை அமைப்புகளும் இந்த ரௌஸா ஷரீஃப் வளாகத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளன.

Please Wait while comments are loading...