Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபதேஹ்கர் சாஹிப் » ஈர்க்கும் இடங்கள் » சங்கோல்

சங்கோல், ஃபதேஹ்கர் சாஹிப்

26

சங்கோல் எனும் இந்த ஸ்தலம் இங்குள்ள தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு பிரசித்தமாக அறியப்படுகிறது. உச்சா பிண்ட் சங்கோல் என்று அறியப்படும் இந்த இடம் ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்திலிருந்து 18.9 கி.மீ தொலைவில் உள்ளது.

சாலை வழியாக இந்த இடத்திற்கு வந்து சேர 28 நிமிடங்கள் ஆகலாம். மத்திய ஆசியாவை ஆண்ட தோரமணா மற்றும் மிஹிரகுலா ஆட்சி வம்சங்களுக்குரிய புராதன நாணயங்கள் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1968-ம் ஆண்டில் ஒரு புத்த ஸ்தூபியும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரா சிற்பக்கலை பாணியை சேர்ந்த 117 கற்சிற்ப அமைப்புகள் இந்த ஸ்தலத்தில் 1985ம் ஆண்டில் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

இவை 1 மற்றும் 2 ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சங்கோல் அருங்காட்சியகத்தில் ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த பல்வேறு வரலாற்று சான்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

15000 த்துக்கும் மேற்பட்ட அரும்பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இந்த தொல்லியல் அருங்காட்சியகம் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மிகப்பிரபல்யமாக அறியப்படுகிறது.

இந்த நகரத்தின் பிரதான சாலையிலேயே ஒரு புத்த ஸ்தூபி மற்றும் மடாலயம் வளாகம் ஒன்றும் அமைந்திருக்கிறது. இவை 1 மற்றும் 2 ம் நூற்றாண்டுக்குரியவையாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed