அல்லாவுக்கு விருப்பமானவர்களாக வணங்கப்பட்ட 13 நபிகளின் கல்லறைகள் இந்த பிராஸ் எனும் இடத்தில் புதையுண்டுபோனதாக கருதப்படுகிறது. இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த 11 மனித எலும்புக்கூடுகள் அந்த நபிகளுடையவை என்றும் நம்பப்படுகிறது.
அதை அடுத்து 11 கல்லறைகள் இதே வளாகத்தில் ஒரு பீட அமைப்பின் மீது உருவாக்கப்பட்டன. இந்த நபிகளை வணங்கும் உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளின் மேல் தளத்தில் உறங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேல்தளத்தில் உறங்கினால் பீட அமைப்பில் உறையும் நபிகளுக்கு அவமரியாதை செய்தது போல் ஆகிவிடும் என்பதே அதற்கு காரணம். ஷெய்க் அஹ்மத் ஃபரூக்கி சிர்ஹிந்தி முஸ்தாத் அலாஃப்சானி எனும் ஞானி இந்த ஸ்தலத்தில்தான் உள்ளூர் மக்களுக்கு மத பிரசங்கங்களை வழங்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications