உஸ்தாத் டி மஸார் எனும் இந்த கல்லறை வளாகம் ஷாஹிர்த் டி மஸார் ஸ்தலத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த வளாகத்தில் உஸ்தான் சையத் கான் எனும் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞரின் கல்லறை இடம் பெற்றுள்ளது.
முகாலயர் கால கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கல்லறை வளாகம் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது. ஒரு பிரம்மாண்டமான குமிழ்மாட கோபுரம் மற்றும் பெரிய நடைக்கூடம் போன்றவற்றை இந்த வளாகம் கொண்டுள்ளது.
சுன்னி முஸ்லிம் இனத்தாரால் இரண்டாவது மெக்காவாக வணங்கப்படும் ரௌஸா ஷரீஃப் வழிபாட்டுத்தலமும் இந்த உஸ்தாத் டி மஸார் கல்லறை வளாகத்துக்கு அருகிலேயே உள்ளது.



Click it and Unblock the Notifications