Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கடக் » ஈர்க்கும் இடங்கள் » தொட்ட பஸப்பா அல்லது தம்பலா கோயில்

தொட்ட பஸப்பா அல்லது தம்பலா கோயில், கடக்

30

பலகோண நட்சத்திர வடிவில் உருவாக்கப்பட்ட இந்த கோயிலின் தனித்தன்மையான வடிவமைப்பு பிரமிக்க வைக்கும் கலையம்சத்தை கொண்டுள்ளது. இந்த கோயில் தம்பலாவில் உள்ள வேறு சில கோயில்களையும் உள்ளடக்கியுள்ளது.

சிவனின் அடையாளமான சிவலிங்கத்தைக் கொண்டுள்ள இந்த கோயிலின் அழகு கடக்’கிற்கு வருகை தரும் பயணிகள் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். வரலாற்றாசிரியர்கள் கருத்துப்படி இந்தக்கோயில் கல்யாணச்சாளுக்கிய வம்ச அரசர்களால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.இந்த கோயிலின் உட்பகுதி எல்லாக்கோயில்களையும் போன்றே ஒரு கருவறை, ஒரு கருவறைப்பாதை மற்றும் மண்டபம் போன்றவற்றை கொண்டுள்ளது. மண்டபத்தில் ஐந்து முக பிரம்மா மற்றும் அவரது வாகனமான அன்னம்; சூரிய பகவானின் இரண்டு உருவங்கள் போன்றவை காணப்படுகின்றன.

கோயில் வாயிலின் வடிவமைப்பு மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்தக்கோயிலின் தூண்களும் சுவர்களும் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட, மெய்சிலிர்க்க வைக்கும் கலையம்சம் கொண்ட  சிற்ப வடிவமைப்புகளைக்கொண்டுள்ளன.

இவற்றில் பலவகை கடவுள்களின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கோயிலுக்கருகில் தாராதேவி தெய்வத்துக்கான ஒரு புத்த கோயிலும் காணப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon