Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கடக் » ஈர்க்கும் இடங்கள் » வீரநாராயணர் கோயில்

வீரநாராயணர் கோயில், கடக்

30

11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த வீரநாராயணர் கோயில் கடக்’கில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். மஹாவிஷ்ணு அல்லது நாராயணனுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் விஷ்ணுவின் வீர அவதாரத்தோற்றம் காணப்படுகிறது.

 

இடுப்பில் உத்தரீயத்துடன் போருக்கு தயாரான கோலத்தில் சக்ரம், சங்கு, கதாயுதம், பத்மா நான்கு கைகளிலும் கொண்டு விஷ்ணுவின் சிலை அமைந்துள்ளது. அருகில் லட்சுமி மற்றும் கருடனின் சிறிய சிலைகள் காணபடுகின்றன.வரலாற்றையும் ஆன்மீகத்தையும் விரும்பும் பயணிகளுக்கு இது பார்க்க வேண்டிய கோயிலாகும். பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களில் ஒன்றான இது 1117ம் ஆண்டு ஹொய்சள அரசன் பிட்டிதேவா மூலம் கட்டப்பட்டுள்ளது.

ஷீ ராமானுஜாச்சாரியாரின் போதனையால கவரப்பட்டு, இந்த கோயிலைக்கட்டி முடித்து தன் பெயரையும் விஷ்ணுவர்தன் என்று மாற்றிக்கொண்டு ஜைனத்திலிருந்து வைணவத்திற்கு இந்த மன்னன் மாறியதாக நம்பப்படுகிறது. குமாரவியாசர் மஹாபாரத காவியத்தை கன்னட மொழியில் இந்த கோயிலிலிருந்துதான் எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது.வீரநாராயண கோயில் பல கலவையான கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ளது. சாளுக்கிய, ஹொய்சல மற்றும் விஜயநகர பாணி கலை அம்சங்கள் இதில் காணப்படுகின்றன.

கோயிலுக்குள் ரங்கமண்டபத்துக்கு நுழையும் வாயிற்பகுதி விஜயநகர பாணியிலும் கருட ஸ்தம்பப்பகுதி ஹொய்சல பாணியிலும் அமைந்துள்ளது. உள் மண்டபம், கருவறை மற்றும் பிரதான கோபுரம் போன்றவை சாளுக்கிய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri