கடக் மாவட்டத்திலுள்ள சுடி இங்குள்ள பாறைச்சிற்பங்களுக்கு மிகவும் பிரசித்தமாக விளங்குகிறது. இங்குள்ள சின்னங்கள் அவ்வளவாக அறியப்படாமல் இருந்த போதிலும் இந்திய தொல்பொருள் துறையின் பொறுப்பின் கீழ் இந்த ஸ்தலம் வந்தபிறகு இவற்றின் பெருமை வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.
கல்யாண சாளுக்கிய காலத்திய வரலாற்றுடன் இந்த ஸ்தலம் தொடர்பு கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்கத்திய சாளுக்கிய கட்டிடக்கலையின் முக்கிய கேந்திரமாக இது விளங்கியிருக்க வேண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது.இங்குள்ள முக்கியமான வரலாற்று கலைச்சின்னங்களாக மல்லிகார்ஜுன கோயில், இரட்டைக்கோபுர கோயில் மற்றும் நாக குண்டா போன்றவை காணப்படுகின்றன. இவை தவிர ஒரு பெரிய கணபதி சிலை, கல் கூரையோடு கூடிய ஒரு ஈஷ்வரலிங்கம், ஹுடே என்றழைக்கப்படும் ஒரு கோபுரம் மற்றும் ஒரு பெரிய சிவலிங்கம் போன்றவையும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
பிரமிக்க வைக்கும் பல கலைச்சின்னங்கள் நிறைந்து காணப்படுவதால் இந்த சுடி ஸ்தலம் கடக் பயணத்தின்போது பயணிகள் விஜயம் வேண்டிய முக்கியமான ஒரு ஸ்தலமாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications